search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி பண்ருட்டியில் இருந்து விற்பனைக்காக  கொண்டுவரப்பட்டுள்ள கரும்புகள்.
    X
    பொங்கல் பண்டிகையையொட்டி பண்ருட்டியில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள கரும்புகள்.

    ஒரு கட்டு கரும்பு ரூ.350-க்கு விற்பனை

    வேலூர் மார்க்கெட்டில் ஒரு கட்டு கரும்பு ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    வேலூர்:

    பொங்கல் பண்டிகை யொட்டி வேலூர் மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் கரும்புகள் கொண்டு வரப்பட்டது.

    சிதம்பரம், பண்ரூட்டி சேத்தியாதோப்பு போன்ற பகுதிகளிலிருந்து கரும்புகள் வந்தன. 20 கரும்புகள் கொண்ட ஒருகட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கலையொட்டி மண்பானை, மஞ்சல், வண்ணகோல பொடிகள், பூக்கள் மக்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்கான அதிகளவில் சக்கரை வள்ளி கிழங்கு, பூசணிக்காய், வாழைத்தார், கருணை கிழங்கு போன்றவை வந்துள்ளன.
    வேலூர் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் குற்ற நடவடிக்கைகள் தடுக்க போலீசார் மாறு வேடத்தில் மக்களோடு மக்களாக தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    கொரோனா பரவி வருவதால் வியாபாரிகள் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×