என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிணமாக கிடந்த பெண் யானை
    X
    பிணமாக கிடந்த பெண் யானை

    மசினக்குடி அருகே அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் யானை

    நீலகிரி மாவட்டம் மசினக்குடி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தின் ஈரோடு மாவட்ட எல்லையான கல்லம்பாளையம் வனச்சரகப்பகுதியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக எல்லையோரத்தில் வனத் துறையினர்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது, பெண் யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.  இதுதொடர்பாக வனத் துறை உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இறந்த யானையின் உடல் மீட்கப்பட்டு   பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

    அப்போது, அந்த யானையின் உடலுக்குள் இருந்த பல்வேறு உள்ளுறுப்புகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானை இயற்கையாகவே உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×