என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் கவுண்டன்யமகாநதி ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளை அதிகாரிகள் பார்வையிட்ட போது எடுத்த படம்.
கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுகளை கொட்டிய தொழிற்சாலைக்கு அபராதம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுகளை கொட்டிய தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் காமராஜர் பாலம் அருகே நேற்று இரவு காலணி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியுள்ளனர் இதனை கண்ட திமுக நகர பொறுப்பாளர் சௌந்தரராஜன் குடியாத்தம் நகராட்சி ஆணையரிடம் தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் காலனி தொழிற்சாலை கழிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி அதனை கொட்டிய காலனி தொழிற்சாலை நிறுவனத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டனர் மேலும் அந்த காலணி தொழிற்சாலை நிறுவனமே ஆற்றில் கொட்டிய கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Next Story






