என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட செல்வம்
சாராயம் பதுக்கிய வாலிபர் கைது
சீர்காழி அருகே சாராயம் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன்,
சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணி சென்றனர்.
அப்போது சீர்காழி அருகே மன்னங்கோவில் பகுதியைச் சேர்ந்த அய்யர் என்கிற செல்வம் (வயது 23) என்பவர் புதுவை மாநில சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின்படி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் தனது மைத்துனர் அகணிபகுதியில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டில் 120 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.
Next Story






