search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பொள்ளாச்சியில் கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை தாக்கிய விவசாயி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொள்ளாச்சி அருகே மனைவியை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் கரடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). விவசாயி. இவரது மனைவி மாலதி (32). இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் விஜயகுமாருக்கு கடந்த 3 வருடங்களாக வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது.  அது நாளடைவில் மாலதிக்கு தெரியவந்தது. அதனை மாலதி கண்டித்து அந்த பெண்ணுடனான  தொடர்பை கைவிடுமாறு கூறி வந்துள்ளார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.   அப்போது ஆத்திர மடைந்த விஜயகுமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். 

    இதில் பலத்த காயம் அடைந்த மாலதி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து மாலதி  கோட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×