என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
கோவையில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
By
மாலை மலர்10 Jan 2022 8:31 AM GMT (Updated: 10 Jan 2022 8:31 AM GMT)

டி.வி.சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை சித்தாபுதூர் அருகே உள்ள வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் யுகேந்திரன் (வயது 23). எலக்ட்ரீசியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து புதிதாக கார் வாங்கினார். கடந்த 3 மாதங்களாக லோனுக்கான பணத்தை கட்டாமல் இருந்தார்.
இந்தநிலையில் யுகேந்திரன் மீண்டும் தனது மனைவியிடம் நகைகளை அடகு வைக்க தருமாறு கூறினார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அவரது மனைவி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த யுகேந்திரன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி டி.வி.யின் சத்தத்தை அதிகப்படுத்தினார். பின்னர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கு கயிற்றில் இருந்து யுகேந்திரனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×