search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டரிடம் காங்கிரசார் மனு அளித்த காட்சி.
    X
    கலெக்டரிடம் காங்கிரசார் மனு அளித்த காட்சி.

    பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு பொய் பிரசாரம் பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரதமருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பா.ஜ.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருவதாக காங்கிரசார் கவர்னருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜவகர்( மாநகர்) கோவிந்தராஜ் (தெற்கு) கலை (வடக்கு) ஆகியோர் இன்று திருச்சி கலெக்டர் சிவராசுவை சந்தித்து கவர்னருக்கு ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்த சம்பவங்களை பா.ஜ.க. அரசியலாக்கி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர்களும், உறுப்பினர்களும் மிகுந்த கவலை அடைகிறோம்.  

    பிரதமர் தனது பஞ்சாப் பயணத்தை திடீரென ரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக பொய்யான கதையின் பின்னணியில் சதி இருப்பதை நாங்கள் காண்கிறோம்.

    பஞ்சாப் மாநிலம் ஹுசைனிவாலாவில் நடந்த கூட்டத்தில் பேசாமல் பிரதமர் திரும்பியதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் என்ற பிரச்சாரம், பஞ்சாபில் காங்கிரஸ் அரசின் மீது பழியை சுமத்தி, வரும் தேர்தலில் கட்சியை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது. 

    பிரதமரின் பாதுகாப்புக்கு சிறப்புப் பாதுகாப்புக் குழு தான் பொறுப்பு என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.  எனவே, பிரதமரின் பஞ்சாப் பயணத்தை எஸ்.பி.ஜி. கையாண்ட விதம் பல கேள்விகளை எழுப்புகிறது.  

    பதிண்டாவில் இருந்து ஹுசைனிவாலா வரையிலான 122 கி.மீட்டர் 2 மணி நேரம் சாலையில் பயணிக்க பிரதமரை எப்படி அனுமதித்தது? என்பது முக்கிய கேள்விகளில் ஒன்றாகும்.  

    மேலும், பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் 20 நிமிடம் காத்திருந்தபோது, ​​ஆயிரக்கணக்கான பா.ஜ.க. ஆதரவாளர்கள் கொடி ஏந்தியபடி அவருக்கு அருகில் இருந்ததையும், கேமராக்களில் படம் பிடித்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  

    இதை வேறுவிதமாக கூற வேண்டுமானால், பிரதமரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவருக்கு அருகில் சென்றது பா.ஜ.க. ஆதரவாளர்களே தவிர, ஒரு கி.மீ தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அல்ல.  

    பரந்து விரிந்த மைதானத்தில் போடப்பட்டிருந்த 70,000 நாற்காலிகளில் 500 நாற்காலிகள் மாத்திரம் பிரதம மந்திரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நிரம்பியிருந்தன. இதில் தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். 
    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    மனு அளித்த போது சிவாஜி சண்முகம் கஸ்பார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×