என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கொத்தமல்லி செடிகள்
நெகமத்தில் செழித்து வளர்ந்து நிற்கும் கொத்தமல்லி செடிகள்
By
மாலை மலர்10 Jan 2022 8:13 AM GMT (Updated: 10 Jan 2022 8:13 AM GMT)

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
நெகமம்:
கொத்தமல்லி இல்லாத மசாலாவையும், சமையலையும் நாம் நினைத்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சைவம் முதல் அசைவம் வரை இந்த கொத்தமல்லி நிச்சயம் இடம் பிடிக்கும்.
அப்படிப்பட்ட கொத்த மல்லி விளைவது நாட்டின் பல இடங்களில் இருந்தாலும் கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் ஜோத்தம்பட்டி, மூலனூர்,காட்டம்பட்டி, காட்டம்பட்டி புதூர், தாசநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அதிகளவில் விளைந்து வருகிறது.
அந்த வகையில் ஜோத்தம்பட்டி, காட்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை காலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. கொத்தமல்லி தழையாக விற்பனை செய்வதற்காக இல்லாமல் விதை மல்லியாக விற்பனை செய்யவே இவை பயன்படுத்தப்படுகிறது.இதற்காகவே உள்ள விதைகளை விதைத்து உழவு செய்யப்படுகிறது.
பருவ மழை தொடங்கும் முன்பாக அதாவது ஈரப்பதம் அடிக்கும் போது இந்த கொத்தமல்லி சாகுபடி செய்யும்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் நன்கு முளைத்து வளர்ந்து விடுகிறது. அதன் பின்பு இதற்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் இந்த கொத்தமல்லி ஆடி, ஆவணி மாதத்தில் மழையின் ஈரத்தன்மையை கொண்டே வளர்கிறது.
நன்கு வளர்ந்து பூ பூத்து காய்கள் பிடிக்க ஆரம்பித்தவுடன் இதன் தழைகள் பழுக்க ஆரம்பித்து விடுகிறது. அதன் பின்பு காய்கள் மட்டும் (மல்லி ) முற்றிய பிறகு அறுவடை செய்து அதற்கான எந்திரத்தின் மூலம் மல்லி பிரித்து எடுக்கப்படுகிறது.
இந்த கொத்தமல்லி சாகுபடி செய்வதற்கு ஏற்றார் போல் காட்டம்பட்டி, காட்டம்பட்டி புதூர், தாசநாயக்கன்பாளையம், ஜோத்தம்பட்டி,சுற்று வட்டார சில பகுதிகளில் களிமண் (எரங்காடு) உள்ளது. இந்த மண் உள்ள பகுதியில் மழை பெய்யும் போது நிலத்தின் ஈரம் காய்வதற்கு பல நாட்கள் பிடிக்கும்.
எனவேதான் இந்த மண் உள்ள பூமியில் கொத்தமல்லி சாகுபடி செய்யும்போது மண்ணில் உள்ள ஈரத்தினால் கொத்தமல்லி நன்கு விளைந்து, வளர்ச்சி அடைந்து விடுகிறது. அதன்பின்பு லேசான துளிர் காற்றின் ஈரத்தில் அறுவடை வரை தாக்குப்பிடிக்கிறது.அதன் பின்பு வெயில் காலம் தொடங்கி விடுவதால் அறுவடை செய்த கொத்தமல்லியை சுத்தப்படுத்த சீதோஷ்ண நிலை உதவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதங்களில் மட்டும் இதுபோன்ற பகுதிகளில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 கிலோ வரை கொத்தமல்லி விதை தேவைப்படும். விதைப்பு பணிக்கு முன்பாக மண்ணில் அடி உரம் போடப்படுகிறது. அதன்பின்பு பெரும்பாலும் உரமோ அல்லது மருந்தோ பயன்படுத்துவது மிகவும் குறைவு. இயற்கையான சீதோஷ்ண நிலையிலேயே இந்த கொத்தமல்லி வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.
நல்ல விளைச்சல் உள்ள சமயத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 250 முதல் 350 கிலோ மல்லி மகசூல் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள். கொத்தமல்லி தழையின் வாசம் எப்போதும் உணவு வகைகளுக்கு நல்ல நறுமணத்தை கொடுக்கும். தற்போது நெகமம் பகுதியில் விளைந்து பூ பூத்து நிற்கும் கொத்தமல்லியில் இருந்து வரும் வாசனை இந்த வழியாக செல்வோருக்கு புத்துணர்ச்சியை வழங்கி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
