என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீலகிரியில் ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ.49,800 அபராதம் வசூல்

    பொதுமுடக்கத்தையும் மீறி வெளியில் சுற்றியதாக நீலகிரியில் நேற்று ஒரேநாளில் 240 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. பல சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊரடங்கை மீறி யாராவது வெளியில் சுற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு சிலர் வாகனங்களில் வெளியில் சுற்றி திரிந்தனர். அவர்களில் தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிந்து, அபராதம் விதித்தனர்.

    பொதுமுடக்கத்தையும் மீறி வெளியில் சுற்றியதாக நீலகிரியில் நேற்று ஒரேநாளில் 240 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ஊட்டி நகரில் 50 வழக்குகள், ஊட்டி ஊரகத்தில் 25 வழக்குகள், குன்னூரில் 65 வழக்குகள், கூடலூரில் 44 வழக்குகள், தோவாலா பகுதியில் 65 வழக்குகள் என மொத்தம் மாவட்டத்தில் ஒரே நாளில் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.49,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
    Next Story
    ×