என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோழியூர் பொதுமக்கள் சாலை மறியல் அறிவிப்பு
கோழியூர் பொதுமக்கள் சாலை மறியல் அறிவிப்பு
திட்டக்குடி நகராட்சியில் மறுவரையறை செய்யுமாறு நகராட்சி ஆணையர் ஆண்டவன் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி நகராட்சியில் மறுவரையறை செய்யுமாறு நகராட்சி ஆணையர் ஆண்டவன் அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது.
திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் ஊர் பகுதியில் தற்போது நடைபெற்ற வார்டு மறுவரையறையின் போது கோழியூர் ஊர்த்தெருவில் உள்ள தெருக்கள் இரண்டு வார்டுகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு வார்டு கீழ்க்கண்ட தெருக்களை உள்ளடக்கியதாக 1. கோழியூர் ரோட்டுத்தெரு , 2. கோழியூர் தெற்கு தெரு , 3. கோழியூர் மேலத்தெரு இவற்றுடன் தருமக்குடிக்காடு ரோட்டுத்தெரு என்ற தெருவை உள்ளடக்கிய பகுதிகள் புதிதாக ஒரு வார்டாக உருவாக்கப்பட்டுள்ளது .
இதில் உள்ள 2011 ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதிதிராவிட மக்கள் தொகை 343. இந்த மக்கள் தொகை இந்த வார்டில் இடம்பெற்றுள்ள தெரு அருந்ததியர் தெருவைச்சேர்ந்தது . இந்நிலையில் தற்பொழுது திட்டக்குடி நகராட்சியில் வார்டு வரையறை செய்யப்பட்டதில் 2011 ன் கணக்கெடுப்பின்படி வார்டு எண் .13 ல் இடம்பெற்ற 1. வதிட்டபுரம் காலணி பாட்டைத்தெருவும் , 2. தருமக்குடிக்காடு ரோட்டுத்தெருவும் வெவ்வேறு வார்டில் இடம்பெற்றுள்ளது .
இதில் வதிட்டபுரம் காலணி பாட்டைத்தெரு முழுவதும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியாகும் . தருமக்குடிக்காடு ரோட்டுத்தெரு ஆதிதிராவிட ( அருந்ததியர் ) இன மக்கள் வசிக்கும் சிறு பகுதியாகவும் உள்ள நிலையில் 2011 ன் கணக்கெடுப்பின்படி ஆதிதிராவிட இன மக்கள் 343 பேர் இடம் பெற்றுள்ள தற்போது வார்டு எண் .19 ஐ ஆதிதிராவிட தொகுப்பிற்கு வழங்காமல் தருமக்குடிக்காடு ரோட்டுத்தெரு இடம்பெற்றுள்ள வார்டு எண் 24 ஐ ஆதிதிராவிட தொகுப்பில் இணைப்பது சட்ட விரோதமாகும் சட்டப்படி தற்போது வரையறை செய்யப்பட்ட வார்டில் 2011 ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறையை மீண்டும் சட்டத்திற்கு உட்பட்டு மறுவரையறை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் நாங்கள் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற 11 .1 .2022 அன்று காலை கோழியூர் பேருந்து நிறுத்தம் விருத்தாசலம்- திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
Next Story






