என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை அருகே பைக்கில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊரடங்கை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு
வேலூரில் ஊரடங்கை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர்:
முழு ஊரடங்கால் வேலூரில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரை மட்டும் போலீசார் அனுமதித்து வருகின்றனர். வேலூர் கோட்டை எதிரே வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவையின்றி வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கூறுகையில்:-
வெளி மாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப் படுகின்றன. வெளிமாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் விதி மீறலில் ஈடுபடுகின்றனர்.
50 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி வருவது மற்றும் முக கவசம் அணியாமல் இருப்பது போன்று சாதாரணமாக உள்ளனர்.
மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் குழு அமைக்கப்பட்டு முககவசம்
அணியாமல் இருப்பவர் களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3500 க்கும் அதிகமான படுக்கைகள் தற்போது மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. ஏ ‘நிலையில் உள்ள நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறுகையில்:-
வேலூர் மாவட்டத்தில் 52 சோதனை சாவடிகள் மற்றும் மாநில எல்லைகளில் 6 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கை யானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு தொடங்கிய நிலையில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவையின்றி வெளியில் சுற்றி செய்வோருக்கு ஸ்பாட் பைன் மற்றும் வழக்குகள் பதியப்படுகின்றது என்றார்.
Next Story






