search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவை மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனை- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

    புதுவை மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த  ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. 

    6-ந்தேதி 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 7-ந்தேதி 177 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.   கொரோனா பரவலை தடுக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  ஆனாலும், தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. 

    புதுவையில் 8-ந்தேதி 3 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 234, காரைக்காலில் 27, மாகியில் 19 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 74, காரைக்காலில் 12, மாகியில் 10 பேர் என 96 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 11, காரைக்காலில் 1, மாகியில் 4 பேர் என 16 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை  மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 27 ஆயிரத்து 571 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  புதுவையில் 546, காரைக்காலில் 141, ஏனாமில் 2, மாகியில் 40 பேர் என 729 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 825 பேர் கொரோனா  தொற்று டன் உள்ளனர். சுல்தான் பேட்டையை சேர்ந்த 58 வயது ஆண் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 882 ஆக உயர்ந் துள்ளது. புதுவையில் 2&வது தவணை  உள்பட 14 லட்சத்து 51 ஆயிரத்து 290 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    கடந்த வாரம் ஒற்றை இலக்கத்தில் தொற்று இருந்தது. இப்போது 280 ஆக தொற்று உயர்ந் துள்ளது. உலகளவில் தொற்று அதிகரித்து வருகிறது.  இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். பலர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது இரண்டும்தான் தொற்று பரவலை தடுக்கும்.  2-வது அலையின்போது படுக்கை கிடைக்காமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலை வராமல் தடுக்க நோய் பரவலை தடுக்க வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். 

    தமிழகத்தில் 9-ந்தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளது. மாநில எல்லைகளில் பரிசோதனை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.  புதுவை  வருவோருக்கு பரிசோதனை நடத்தப்படும். அவர்களுக்கு தொற்று இருந்தால் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள். அவர்கள் விரும்பாவிட்டால் திருப்பி அனுப்பப்படுவார்கள். 

    புதுவை மார்பக நோய் மருத்துவமனையில் 33 பேர் தொற்றுடன்   உள்ளனர். இதில் 30 பேர் தடுப்பூசி போடாதவர்கள்.  பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. தொற்று அதிகரித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். 150-க்கும் மேற்பட்ட மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வர கால தாமதமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×