என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுக்கையா வாத்தியார் தெரு மூடப்பட்டுள்ள காட்சி.
    X
    சுக்கையா வாத்தியார் தெரு மூடப்பட்டுள்ள காட்சி.

    வேலூரில் மேலும் 2 தெருக்கள் மூடல்

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் காரனமாக மேலும் 2 தெருக்கள் மூடப்பட்டன.
    வேலூர்:-

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டவரை தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். 

    வேலூர் காந்தி ரோடு, பாபுராவ் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் நூற்றுக்கணக்கான வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். இவர்கள் மூலமாக தொற்று அதிகரித்து வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டை மற்றும் பூங்காவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் வெளிமாநிலத்தவர்களை கண்காணிக்கவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை விடுதிகளில் செய்து கொடுத்து அவர்களை வெளியே நடமாட அனுமதிக்க கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.

     அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு தேவைப்பட்டால் விடுதிப் பணியாளர்கள் மூலம் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள பாபுராவ் தெருவில் தங்கும் விடுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் சிலருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து பாபுராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் வெளியில் வரமுடியாத படி அங்கு தடுப்புகள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 

    இதை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் சில பகுதிகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து தங்கும் விடுதிகளில் உள்ளவர்களை வெளியே வராமல் இருக்க பாபுராவ் தெருவில் இரும்புத் தகடுகள் கொண்டு அடைத்தனர். 

    இன்று காலை சி.எம்.சி.ஆஸ்பத்திரி எதிரே உள்ள சுக்கையா வாத்தியார் தெரு, லத்திப்பாஷா தெருக்கள் மூடப்பட்டன.

    சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தியாகராஜன் (27), தணிகைவேல் (47) ஆகியோர் பாபு ராவ் தெருவில் தனிமை படுத்தி அமைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து சேதப்படுத்தி அகற்றினர். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×