என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
வேலூரில் இன்று 274 பேருக்கு கொரோனா, 400 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்
வேலூரில் இன்று 274 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வேலூர் மாவட்டத்தில் 274 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க. வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதி கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த 2 விடுதிகளில் 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்லூரி விடுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகர்நல அலுவலர் மணிவண்ணன், வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story






