என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நீலகிரியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி
நகராட்சி, பேரூராட்சி வாரியாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
ஊட்டி:
நீலகிரியில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தலுக்கான பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதில்,’நான்கு நகராட்சிக்கு, 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளுக்கு 201 வாக்குச்சாவடி என மொத்தம் 409 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல், கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஓட்டு எந்திரங்கள் ஒதுக்கீட்டின்படி, நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக பிரித்து வைக்கப்பட்டது. அதில், பெட்டி எண், ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் எண்ணை சரிபார்த்தனர். இதில், 15 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள, 409 ஓட்டுச்சாவடிகளுக்கு, 20 சதவீதம் கூடுதலாக ஓட்டுபதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 495 ஓட்டுப்பதிவு எந்திரம், 495 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
Next Story






