என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட விளை நிலத்தில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாயத் திற்கு போக மீதி உள்ள உபரி நீர் வீரமாகாளியம்மன் கோவில் தெப்பக்குளம் வழியாக அருகன் குளத்தில் சென்று கலக்கிறது. இந்நிலையில் இந்தாண்டு போதிய மழை பெய்து நல்ல விளைச்சலைக் கண்ட போதும், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வடிகால் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் தேங்கிய தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குளம் போல் காட்சியளிக்கிறது.
எனவே விளை நிலத்தில் தேங்கிய தண் ணீரை வெளியேற்றிட, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அல்லது மாற்று வழியில் தண்ணீரை வெளியேற்றிட வேண்டும் எனக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற் பட்டோர், அறந்தாங்கி& புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தை அறிந்த வட்டாட்சியர் காமராஜ் உள்ளிட்ட துறை அதிகாரிகள் விரைந்து வந்து. மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே, சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






