என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பங்களாதேஷில் கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி மீனாட்சி
    X
    பங்களாதேஷில் கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி மீனாட்சி

    கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

    தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற கல்லூரி மாணவி பங்களாதேஷில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பெண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திருப்பியவருக்கு ராமநத்தம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் மேளதாளத்துடன் மலர் தூவியும் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு. 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த வேலு விவசாயி. லெட்சுமி இவர்களது மகளான மினாட்சி (20) இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் வேதியியல் 3 ஆண்டு படித்து வருகின்றார். இவர் பங்காலதேஷ் டாக்கா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் கபடி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் கலந்து கொண்டனர். 

    இதில் மீனாட்சியும் ஒருவர் ஆவர் இவர் கடந்த 27-10-2021 முதல் 30-10-2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பெண்கள் அணியின் கேப்டனாக இருந்து விளையாடி வெள்ளி பதக்கம் வென்றார். இப்பொழுது 29-12-2021முதல் 31-12-2021வரை பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளனர். 

    தங்கம் வென்ற மீனாட்சி கூறுகையில் இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×