என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது இடத்தில் மது குடித்தால் தகவல் தெரிவிக்க செல்போன் எண்ணுடன் பதாகைகளை போலீசார் வைத்திருப்பதை காணலாம்.
    X
    பொது இடத்தில் மது குடித்தால் தகவல் தெரிவிக்க செல்போன் எண்ணுடன் பதாகைகளை போலீசார் வைத்திருப்பதை காணலாம்.

    பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது வழக்கு - பாகூர் போலீசார் எச்சரிக்கை

    பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது வழங்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    பாகூர்:

    பாகூர்  எல்லை பகுதியான சோரியாங்குப்பம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுகடைகளுக்கு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் மது அருந்த வந்து செல்கின்றனர்.

    மது அருந்துபவர்கள் மதுபானங்களை வாங்கி அருகிலுள்ள மனைப் பிரிவுகள் மற்றும் விவசாய விளை நிலங்களில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பாகூர் போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதனை தடுக்கும் விதமாக பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விளை நிலங்களை சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதாகைகளை பாகூர், சோரியாங்குப்பத்தின் முக்கிய  பகுதிகளான 8 இடங்களில் பாகூர்  இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வைத்துள்ளனர். 

    மேலும்   பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க பதாகைகளில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ரோந்து போலீசார் தொலைபேசி எண்கள் இடம்பெற்றுள்ளன.
    Next Story
    ×