search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே பள்ளி கட்டிடத்தை இடித்த அ.தி.மு.க. கவுன்சிலர் கைது

    தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடிக்கவேண்டிய கட்டிடத்திற்கு பதிலாக அருகில் நல்ல நிலையில் இருந்த பள்ளியின் கட்டித்தை இடித்தது தொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் சேதம் அடைந்து இருந்தது.

    இந்த கட்டிடத்தை இடிப்பதற்காக கடம்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடிப்பதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த பணியை அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் பெற்று இருந்தார்.

    இந்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடிக்கவேண்டிய கட்டிடத்திற்கு பதிலாக அருகில் நல்ல நிலையில் இருந்த பள்ளியின் கட்டித்தை ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு கடந்த மாதம் இடித்தார்.

    இதனால் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் கடம்பத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவுன்சிலர் சுரேசை தேடி வந்தனர்.

    இதற்கிடையே திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த கவுன்சிலர் சுரேசை தாலுகா இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா, தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் திருப்பாச்சூர் பகுதியில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×