search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
    X
    வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராத

    வேலூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து அபராதம் விதித்தனர்.
    வேலூர்:

    வேலூரில் இன்று கொரோனா புதிய உச்சத்தை எட்டி உள்ளது. மாநகராட்சி பகுதியில் முககவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இன்று பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.500,பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

    வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் வந்த வர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது இன்று காலை ஒரு மணி நேரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனர்.

    அதிகாரிகள் அபராதம் விதிப்பதை கண்ட பொதுமக்கள் பலர் வேகமாக சென்று கடைகளில் முகக்கவசம் வாங்கி அணிந்து சென்றனர்.

    பொது மக்கள் தங்களை தானாகவே தற்காத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
    Next Story
    ×