search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    File Photo
    X
    File Photo

    கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறினால் அபராதம் கரூர் எஸ்.பி. எச்சரிக்கை

    கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் எச்சரித்துள்ளார்.
    கரூர்: கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வ நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் இலவசமாக முகக்கவசங்களை வழங்கி, அதன் அவசியம், தொடர்ந்து முகக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கொரோனா மறுஉருவமாக பரவி வரக்கூடிய ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகையை சேர்ந்த வைரஸ்கள் பரவிவரும் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், போக்குவரத்து சந்திப்புகள் ஆகிய இடங்களில் இலவசமாக முகக்கவசம் வழங்கி, பொதுமக்களை தொடர்ந்து முகக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டு உள்ளது.
    பரவி வரும் ஒமேக்ரான் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். 2 நாட்களில் 1 மடங்கு அதிகரிக்கும் வகையில் மிக வேகமாக பரவிவருகிறது. தேவையான தடுப்பு நடவடிக்கை மூலம் பரவலை கட்டுக்கள் கொண்டுவரவேண்டும். எல்லோரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளி பின்பற்றவேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என்றார்.
    இதேபோல் கரூர் மாநகராட்சி சார்பில் கரூர் வர்த்தகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகவே வர்த்தகர்கள் தங்கள் நிறுவனம் அல்லது கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தவேண்டும்.
    சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். கடைகளில் கை சுத்திகரிப்பான் வைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்தே அனுமதிக்க வேண்டும். கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும். கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஜவுளி, நகைக்கடைகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட 30&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×