என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
    X
    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

    108 ஆம்புலன்சில் கூலி தொழிலாளியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

    சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் கூலி தொழிலாளியின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் மலை குன்ற கிராம பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆம்புலன்ஸ் குன்றி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது பரமேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்த கொண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பரமேஸ்வரிக்கு வாகனத்திலேயே பிரசவம் பார்த்தனர். இதில் பரமேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் - சேயும் கடம்பூர் அரசு துணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இக்கட்டான சூழ்நிலையில் சமயோசிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விஜய் மற்றும் வாகன ஓட்டுநர் அரப்புலி சாமி ஆகியோரை கிராம மக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×