என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்க வந்த வேலூர் ஓல்டு டவுன் பகுதி மக்கள்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதி கேட்டு மனு
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஓல்டு டவுன் பொதுமக்கள் மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:-
ஓல்டு டவுன் உத்தர மாதா கோவில் பின்புறம் கடந்த 60 ஆண்டுகளாக 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குழந்தைகளுடன் வீடு கட்டி வசித்து வருகின்றனர். நாங்கள் வசித்து வரும் இடத்திற்கு வீட்டுமனை பட்டாக்கள் கடந்த 30 ஆண்டுகளாக அதிகாரியிடம் மனு கொடுத்து வருகிறோம் ஆனால் இதுவரை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
பட்டா இல்லாததால் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை மற்றும் கழிப்பிட வசதி இல்லாமல் பெண் குழந்தைகளுடன் அவதி அடைந்து வருகிறோம். எனவே நீங்கள் மனு மீது பரிசீலனை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
வேலூர் மாவட்டம் திருமணி கிராமத்தை சேர்ந்த ராமன் அளித்த மனுவில் கூறியதாவது:-
தாசில்தாரை தாக்கியதாக என்னுடைய மகன் மற்றும் பேரன் மனோஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இதனால் எனது மருமகள் மற்றும் குழந்தைகள் வறுமையில் வாடி வருகின்றனர் எனவே இருவரையும் குண்டர் சட்டத்தில் இருந்து இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
Next Story






