என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க முடியாமல் திணறும் தனிப்படை போலீசார்
முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் துணையுடன் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருப்பதாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி உள்ளிட்ட சிலரும் இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டனர் என புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு டிசம்பர் 17-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.

அவர் எங்கு சென்றார்? என்ற விவரம் தெரியாததால் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். பின்னர் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது. இருப்பினும் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.
அவரது செல்போன்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான கட்சியினரின் செல்போன் உரையாடல்களை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பழனின் கார் டிரைவர், உதவியாளர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ஆகியோரை போலீசார் அழைத்து விசாரித்தனர்.
இதில் ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கேரளா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, புதுடெல்லி, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு தனிப்படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர், கும்பகோணம் என தமிழகம் முழுவதும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் பணம் பெற்றதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுவரை 9 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார்.
புகார் கொடுத்தவர்களிடம் முதல் கட்டமாக போலீசார் நேரடியாக விசாரணை நடத்தினர். எந்த பணிக்காக யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்த சங்கர்கணேஷ் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. நிர்வாகிகள் தனது குடும்ப பூர்வீக சொத்தினை கடந்த 2019-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து மோசடியாக தங்களது பெயரில் பதிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி கேட்டபோது தன்னையும், குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் ராஜேந்திரபாலாஜி சிக்கினால் தான் பண மோசடி விவகாரத்தில் உண்மை நிலை தெரியவரும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 8 தனிப்படைகள் அமைத்தும் இன்னும் போலீசார் இந்த வழக்கில் திணறி கொண்டுதான் உள்ளனர்.

அன்றைய தினம் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜேந்திர பாலாஜிக்கு இந்த தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் துணையுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதுங்கி இருப்பதாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க முக கவசமே பாதுகாப்பு கேடயம் - மு.க.ஸ்டாலின்
Next Story