என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒமைக்ரான்
    X
    ஒமைக்ரான்

    நீலகிரியில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
    ஊட்டி:

    கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. 

    கடந்த ஒரு மாதமாக ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது.

    இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    இதனால், இங்கும் மீண்டும் தொற்று அதிகரித்து விடுமோ என உள்ளூர் மக்கள் அச்சப்படுகிறார்கள்.

    இதனை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அம்ரீத் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    மாநில எல்லைகளில் மருத்துவ குழுவினர் கொண்டு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. 

    இதுவரை நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை, என்றார்.
    Next Story
    ×