என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
விருதுநகர் அருகே தம்பதியை தாக்கிய 3 பேர் கைது
விருதுநகர் அருகே தம்பதியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது 21). இவரது கணவர் முத்துக்கருப்பன். கட்டிட தொழிலாளி. இவரது மாமனார் வீரபத்திரனுக்கு கிராமத்தில் விவசாயநிலம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சவுந்தர்யா, முத்துக்கருப்பனுடன் மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வலையபட்டியை சேர்ந்த சத்யராஜ் (29) முத்தையா (37) உள்பட 4 பேர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சவுந்தர்யாவையும், முத்து கருப்பனையும் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த முத்துக்கருப்பனின் சகோதரி சின்ன ஈஸ்வரியையும் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சவுந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் மேற்படி 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சத்யராஜ், முத்தையா உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
Next Story






