என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    புதுவையில் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    புதுவையில் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் யோசுவாதுப்பியேர் (வயது24). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் யோசுவாதுப்பியேர் அதிர்ச்சியடைந்தார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து யோசுவாதுப்பியேர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாகி பகுதியை சேர்ந்தவர் யாதுநாத்(வயது20). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் புதுவைக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நள்ளிரவு பிரார்த்தனைக்காக ரெயில் நிலையம் எதிரே உள்ள தேவாலயத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தேவாலயம் எதிரே நிறுத்திவிட்டு பிரார்த்தனைக்கு சென்றார்.

    பிரார்த்தனை முடிந்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் யாதுநாத் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×