என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
வேலூர் கொசப்பேட்டையில் டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை, பணம் கொள்ளை
வேலூர் கொசப்பேட்டையில் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை கொசத்தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி. தம்பதி இருவரும் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கினர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் நள்ளிரவில் சதீஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 9,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலையில் வீடு திரும்பிய சதீஷ் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் நகை பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது தொடர்பாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story