search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குளங்களில் மீன் வளர்ப்பு உரிமம் ஏலம்- வியாபாரிகள் போட்டா போட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ளதால் நீரால் கடந்த 3 மாதமாக குளங்கள் நிரம்பி வழிகிறது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ள 10 குளங்களில் மீன் வளர்ப்புக்காக ஓராண்டுக்கான உரிமம் ஏலம் விடப்பட்டது. மேட்டுப்பாளையம் ஊராட்சியில்  முதன் முறையாக 10 குளங்களில் மீன் வளர்த்து விற்கும் உரிமம் ஓராண்டுக்கான தொகை ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ளதால் நீரால் கடந்த 3 மாதமாக குளங்கள்  நிரம்பி வழிகிறது. இந்நிலையில் கல்லாங்காட்டுப்பதி - ஒரு குளம், மேட்டாங்காட்டுவலசு - 2 குளம், குழலிபாளையம் - 2 குளம், பழனிக்கவுண்டன்வலசு - 5 குளம் உட்பட 10 குளங்களில் மீன் வளர்த்து விற்கும் உரிமத்துக்கான ஏலம்  ஊராட்சி தலைவர் விசாலாட்சி தலைமையில் விடப்பட்டது. இதில் 16 வியாபாரிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×