என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து
கார் மோதி விபத்து - ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி பலி
கோவை அருகே கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள வெங்கட் ராமன் ரோட்டை சேர்ந்தவர் ராமதுரை (வயது 88). இவர் வேளாண்துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்று இருந்தார்.
சம்பவத்தன்று இவர் ஆரோக்கிய சாமி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ராமதுரை மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் ராமதுரை பரிதாபமாக இறந்தார்.
Next Story