என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
விருதுநகரில் காதலித்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
விருதுநகரில் காதலித்து 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் அக்ரகாரம் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரது தாயார் மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மகளிடம் விசாரித்த போது, தான் வேலை பார்க்கும் கடைக்கு எதிரே உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் போத்தநதியைச் சேர்ந்த அழகுராஜா (19) என்பவர் காதலித்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் தாயார் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அழகுராஜாவை கைது செய்தனர்.
விருதுநகர் தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (23). இவரும் அதே பகுதி கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலராஜ் என்பவரும் காதலித்து வந்தனர்.
சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் சில வாரங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அப்போது பாண்டியம்மாளிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் கேட்டபோது ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக போலீசார் முன்னிலையில் உறுதியளித்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென பாண்டியம்மாளை திருமணம் செய்ய மறுத்த தோடு, அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலராஜை தேடி வருகின்றனர்.

Next Story