search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலையில் குண்டும் குழியுமான ரெயில்வே சுரங்கப்பாதை- வாகன ஓட்டிகள் அவதி

    சுரங்க பாதையின் நடுப்பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    உடுமலை:

    உடுமலை தளி ரோட்டில் நகராட்சி பகுதியில் உள்ள காந்தி சதுக்கத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.

    இந்த சுரங்கப்பாதை வழியாக வேன் மற்றும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக பயன்படுத்தி வருகின்றன. இதில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதையின் மேல் தளம் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

    அந்த சுரங்க பாதையின் நடுப்பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த குண்டும் குழியுமாக உள்ள பாதையில் செல்லும்இரு வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. 

    எனவே இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள்மற்றும் நடந்து செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 

    எனவே குண்டும் குழியுமாக உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை சீரமைக்கும் பணியை விரைந்து செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×