என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம்
தஞ்சை அருகே விஷம் குடித்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
தஞ்சை அருகே வயிற்று வலி காரணமாக கிராம நிர்வாக அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவையாறு:
திருவையாறு அருகே ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (52). இவர் பாபநாசம் தாலுகாவில் வி.ஏ.ஓ. வாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அமிர்த ஆண்டனி இமாகுலேட் (42) என்கிற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் கடந்த 3 வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 16ந்தேதி வலி அதிகமாகவே வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். உடனே தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story