search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தொண்டு உள்ளத்தோடு இறைசேவை செய்தால் ஒழுக்கம் தானாக வரும்- ஆன்மீக பட்டிமன்றத்தில் பேச்சு

    கருணை உள்ளத்தோடு இருந்தால் தான் தொண்டு செய்ய முடியும்.
    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு, ஸ்ரீ அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் ‘இறைவனை ஈர்ப்பது பக்தியா? தொண்டா?’ என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. 

    ராமலிங்கம் நடுவராக இருந்தார். ‘பக்தியே’ என்ற தலைப்பில் ராமன், சரளா தேவியும், ‘தொண்டே’ என்ற தலைப்பில் தங்கவேல், கல்பனா ஆகியோரும் பேசினர்.

    இதில் ‘பக்தி’ என்ற தலைப்பில் பேசியவர்கள், வைராக்கியத்தோடு கூடிய பக்தி தான் இறைவனை ஈர்க்க முடியும். பக்தி என்பது அடித்தளம். தொண்டு என்பது அதன் மேல் உயர்ந்து நிற்கும் கட்டடம் போன்றது. தொண்டின் அடித்தளம் பக்திதான். இறைவன், தேசம், குடும்பம் என அனைத்திலும் பக்தி தான் முக்கியம், பக்தி முதலில் இருந்தால் தொண்டு உள்ளம் தானாக வந்து விடும். 

    பக்தி என்பது அன்பு, மனித நேயம், கருணை உள்ளிட்டவை. இறைவன் திருவடியை சரணடைய பக்தி தான் தேவை என்றனர்.

    தொண்டு’ என்ற தலைப்பில் பேசியவர்கள், கருணை உள்ளத்தோடு இருந்தால் தான் தொண்டு செய்ய முடியும். தமிழகத்தில் தான் குடும்பங்களே கோவிலாக உள்ளது. கோவில்கள் கட்டுவது, அன்னதானம் செய்வது, மலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பும் வரை விளக்கு ஏற்றுவது உள்ளிட்ட அனைத்துமே தொண்டு தான். தொண்டு உள்ளம் என்பது சாதாரணமானது இல்லை. 

    தொண்டு உள்ளம் கொண்டவர்கள் யாருடையை மனதையும் புண்படாமல் பேசுவார்கள். தொண்டு உள்ளத்தோடு இறைசேவை செய்தால் ஒழுக்கம் தானாக வரும். ஒருவருக்கு சமயத்தில் உதவுவது கூட மிகப்பெரிய தொண்டு தான் என்றனர்.
    Next Story
    ×