என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அய்யப்பசாமி.
பல்லடத்தில் அய்யப்பசாமி வீதிஉலா
தங்க முலாம் பூசிய யானை வாகனத்தில் அய்யப்பசுவாமி திருவீதி உலா பல்லடம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் சந்தைப்பேட்டை அய்யப்பசுவாமி கோவிலில் 62ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டல பூஜை சங்காபிசேக விழா நடைபெற்றது. விழாவில் விநாயகர் பூஜை, 108 வலம்புரி சங்கு பூஜை, சூக்தபாராயணம், மகாலட்சுமி ஹோமம், மகா சங்கல்பம், மற்றும் அய்யப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை,மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்ப சுவாமியை வழிபட்டனர்.
மண்டல பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜை சங்காபிசேக விழா நிறைவாக தங்க முலாம் பூசிய யானை வாகனத்தில் அய்யப்பசுவாமி திருவீதி உலா பல்லடம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. இதில் கோவில் குருசாமிகள் கெஜலட்சுமி ,கல்யாணசுந்தரம், ஜெகதீசன், ஆரியாஸ் ராஜாராம், சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
Next Story






