search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம் நடைபெற்ற காட்சி.
    X
    முகாம் நடைபெற்ற காட்சி.

    உடுமலையில் டெங்கு- கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்

    காய்ச்சல் சிகிச்சைக்காக வரும் நபர்களின் விவரங்களை சேகரித்து அப்பகுதிகளில் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    உடுமலை:

    உடுமலை நகராட்சி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் டெங்கு மற்றும்கொரானா தடுப்பு நடவடிக்கை சிறப்பு முகாம் நடந்தது. 

    முகாமை நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கௌரி சரவணன் தொடங்கி வைத்தார். நூலகர் கணேசன் முன்னிலை வகித்தார்.

    உடுமலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கீர்த்திகா பொதுமக்கள் மற்றும் நூலக வாசகர்ளுக்கு பரிசோதனை செய்து டெங்கு நடவடிக்கை மற்றும் கொரோனா குறித்து விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.

    உடுமலை நகராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாள்தோறும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்காக வரும் நபர்களின் விவரங்களை சேகரித்து அப்பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இதன் ஒரு பகுதியாக உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் பொதுமக்களுக்கும் நூலக வாசகர்களுக்கும் டெங்கு மற்றும்  கொரோனா குறித்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    காய்ச்சல் சிகிச்சைக்காக வரும் நபர்களின் விவரங்களை சேகரித்து அப்பகுதிகளில் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    மேலும் அப்பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி, கிருமிநாசினி தெளித்தல், புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன்  உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. 

    பொதுமக்கள் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து தொற்றுநோய் இல்லாத நகரமாக உடுமலையை மாற்றிட உதவிட வேண்டும் என நகர்நல அலுவலர் டாக்டர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இம்முகாமில் உடுமலை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையடாக்டர். கௌதம் அறிவுரையின் பேரில் செவிலியர்கள் சரண்யா, மக்களை தேடி மருத்துவபணியாளர் ராதிகா மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

    இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காய்ச்சல், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. 

    முகாம் ஏற்பாடுகளை உடுமலை சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கர் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×