என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெலிங்டனில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதை காணலாம்
வெலிங்டனில் விதிமுறையை மீறி கட்டிய 16 கட்டிடங்கள் இடிப்பு
வெலிங்டனில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட 16 கட்டிடங்களை இடித்து கன்டோன்மெண்ட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஊட்டி:
குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மெண்ட் வாரியத்தின் கீழ் 7 வார்டுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகள், கட்டிடங்களில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கூட கன்ட்டோன்மெண்ட் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
சமீபகாலமாக உரிய அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனை ஆய்வு செய்த கன்டோன்மெண்ட் நிர்வாகம் விதிமீறிய கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கியது.
இதையடுத்து முதல் கட்டமாக 14 கட்டிடங்களும், 2-ம் கட்டமாக 19 கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டன. இந்தநிலையில் நேற்று 3-ம் கட்டமாக விதியை மீறி கட்டப்பட்ட 16 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் 4 குழுக்களை அமைத்தது. அத்துடன் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் பலத்த பாதுகாப்புடன் 16 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அனுமதி இல்லாமல் விதியை மீறி கட்டிடங்கள் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story