என் மலர்
உள்ளூர் செய்திகள்

அலகுமலை கோவில்
கும்பாபிஷேகத்தையொட்டி அலகுமலை கோவிலில் முகூர்த்தக்கால் பூஜை
திருப்பணி மற்றும் புதியதாக திருமண மண்டபம், மேற்கூரை உள்ளிட்ட பணிகள் ரூ.4கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துகுமாரசாமி, பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருகிற ஜவனரி மாதம் 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை கட்டுமானத்துக்கு முகூர்த்தக்கால் பூஜை நடந்தது.
இக்கோவிலுக்கு நடந்து செல்லும் பாதை, படிக்கட்டுகள் புதுப்பிக்கப்பட்டு கிரிவலப்பாதையில் மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திருப்பணி மற்றும் புதியதாக திருமண மண்டபம், மேற்கூரை உள்ளிட்ட பணிகள் ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து முதல்கட்டமாக முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story