என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாணவர்கள் வருகை பதிவு- எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற நவீன வசதி

    எமிஸ் பதிவுகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் ‘சர்வர்’ இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
    உடுமலை:

    தமிழகத்தில்  பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவ்வகையில் தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப்பதிவு,’டி.என்.எமிஸ்’ என்ற ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    தற்போது  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே ‘ஆப்’ பில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில்  மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவை தினமும் 100 சதவீத அளவில் உறுதி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    எமிஸ் பதிவுகளை  விரைந்து செயல்படுத்தும் வகையில் ‘சர்வர்’ இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக ‘ஆப்லைன்’ வாயிலாகவும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் பள்ளிகளில்  அன்றைய தின பதிவுகள்  மறுநாள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இருப்பினும்  காலையில் வகுப்புகள் துவங்கும் போதே அனைத்து பதிவுகளையும் முடித்து விட ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல்  பதிவேற்றம் செய்யும்போதே  பதிவு செய்யும் நேரமும் பதிவாகிறது. தகவல் எந்த நேரத்தில் சர்வரை சென்றடைந்தாலும் பதிவு நேரம் மாறாது. எனவே அனைத்து பள்ளிகளிலும்  இனி  நெட்வொர்க் பிரச்சினையை காரணம் காட்டக்கூடாது.

    100 சதவீதம் அளவில் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவை உறுதி செய்து கொள்ள வேண்டும். பதிவை எளிதாக மேற்கொள்ள தேவையான கண்காணிப்பு வழிமுறைகள் பள்ளிகள் தோறும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×