என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கயம் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள்.
காங்கயம் நகராட்சியில் குப்பைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது- தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
தூய்மைப்பணி மேற்கொள்ளும்போது கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிந்து பணி செய்ய வேண்டும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் நகராட்சி தூய்மைப் பணியாளார்களுடனான அறிமுக கூட்டத்தில் கலந்து கெண்டார். இதில் அவர் பேசியதாவது:-
நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி குப்பைக்கிடங்குக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். மாறாக குப்பைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது. தூய்மைப்பணி மேற்கொள்ளும்போது கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிந்து பணி செய்ய வேண்டும்.
குப்பைகளை பொதுமக்கள் சாலையில் கொட்டி செல்வதை தடுக்க வேண்டும், தூய்மைப் பணியாளார்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நேரில் வந்து தெரிவிக்கலாம் என்றார்.
Next Story