என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உடுமலை வழியாக இயக்கப்பட இருந்த பொள்ளாச்சி-திருச்செந்தூர் விரைவு ரெயில் சேவை திடீர் ரத்து
பல மாதங்களுக்கு பிறகு நாளை 15-ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உடுமலை:
பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையை வழியாக விரைவு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு நாளை 15-ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது மறு அறிவிப்பு வரும் வரை பொள்ளாச்சி - திருச்செந்தூர் விரைவு ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது.
Next Story






