என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
திருப்பூரில் 2 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்-52 பேர் கைது
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 என்பதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 என்பதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்க துணைத்தலைவர் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் பொருளாளர் காளியப்பன் உள்பட 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி உள்ளிட்ட போலீசார் கைது செய்து அந்தப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதுபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் 2 இடங்களில் நடந்த மறியலில் 34 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story






