என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
வேதாரண்யம் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது
வேதாரண்யம் பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் பிராந்தியங்கரை மூலக்கரை வடமழைமணக்காடு கத்திரிப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். ஆடு திருடர்களை பிடிக்க வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ்(வயது19), திருத்துறைபூண்டி பெரிய சிங்களாந்தியை சேர்ந்த ஆனந்த் (19) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் கரியாப்பட்டினம் பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் பிராந்தியங்கரை மூலக்கரை வடமழைமணக்காடு கத்திரிப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். ஆடு திருடர்களை பிடிக்க வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று செட்டிபுலம் பகுதியில் ஆடு திருடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தொடர்ந்து தனிப்படை போலீசார் வேதாரண்யம் செங்காதலை பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
Next Story