என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராஜபாளையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா?- போலீசார் விசாரணை

    ராஜபாளையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வரும் ரெயில் மார்க்கத்தில் எஸ்.ராமலிங்கபுரம் அருகே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சிதறி கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்து.

    இதையடுத்து ராஜபாளையம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்தவர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சுமன் என்பது தெரிய வந்தது.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் அங்கு வேலை பிடிக்காமல் 7 மாதங்களுக்கு முன்பு சுப்புலாபுரம் திரும்பி வந்துள்ளார். சொந்த ஊரில் வேலை எதுவும் கிடைக்காத நிலையில் வறுமையின் காரணமாக விரக்தியில் இருந்த சக்திசுமன் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×