என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்போதைய வானிலை நிலவரப்படம்
சென்னையில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று முதல் 14-ந்தேதி வரை கடலோர மாவட்டங்கள் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையில் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடேலார மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மகாபலிபுரத்தில் 6 செ.மீ., காட்டுமன்னார்கோயிலில் 5, அரியலூர் மாவட்டம் திருமானுர், திருச்சி மாவட்டம் சமயபுரம், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
Next Story






