search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை கோட்டத்தில் கால்நடைகளுக்கான சுகாதார சிறப்பு முகாம்-60 மையங்களில் நடக்கிறது

    60 மையங்களில் வரும் 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நடக்கிறது.
     உடுமலை:

    உடுமலை கோட்ட கால்நடை துறை சார்பில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 60 மையங்களில் கால்நடை துறை சார்பில் சிறப்பு சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடங்கி உள்ளது. 

    இம்முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சிறு அறுவை சிகிச்சைகள் உட்பட கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு அனைத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    உடுமலை கோட்டம் உடுமலை ஒன்றியம், எலையமுத்தூர், மலையாண்டி கவுண்டனூர், கல்லாபுரம், குறிச்சிக்கோட்டை, ஜல்லிபட்டி, வாளவாடி , செல்லப்பம்பாளையம், பூலங்கினார் கால்நடை கிளை நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் வருகிற 15-ந் தேதி தொடங்கி பிப்ரவரி வரை நடக்கிறது. 

    குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி, பூளவாடி, பெதப்பம்பட்டி, ராமச்சந்திராபுரம், வி.வேலூர், மூங்கில் தொழுவு, பொட்டையம்பாளையம் கால்நடை கிளை நிலையங்கள் உட்பட்ட கிராமங்களில் 20 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.

    மடத்துக்குளம் ஒன்றியம் மடத்துக்குளம் ,கணியூர், துங்காவி கால் நடை கிளை நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் உள்ள 60 மையங்களில் வரும் 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நடக்கிறது.

    கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,உடுமலை கோட்டத்தில் உள்ள 3  ஒன்றியங்களிலும் மொத்தம் 60 நாட்கள் கிராமம் வாரியாக நடக்கும் முகாம்களில் கால்நடை டாக்டர்கள், பணியாளர்கள் ,அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் பங்கேற்க உள்ளனர். முகாம்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து பயன்பெறலாம் என்றனர்.  
    Next Story
    ×