search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
    X
    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    ராகல்பாவியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    குறு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை இல்லம் தேடிக்கல்வி கலைக்குழுவினர் செய்து காட்டினர்.
     உடுமலை:

    ராகல்பாவி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன் தலைமை தாங்கினார். 

    பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் காயத்ரி, ஜெனட் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேரிடர் காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி நாடகம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. 

    கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்வியின் நோக்கம் குறித்தும் தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் குறு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை இல்லம் தேடிக்கல்வி கலைக்குழுவினர் செய்து காட்டினர். 

    மேலும் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக இணைந்து மாலை நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. 

    அந்த நிகழ்வின் போதே ராகல்பாவி ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்பு எடுக்க தன்னார்வலர்களாக வீரலட்சுமி சத்தியவாணி, நிவேதா, கோகுலபிரியா ஆகிய பட்டதாரிகள் விருப்பம் தெரிவித்தனர். 

    அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அனைவரும் தெரிவித்தனர். 

    முடிவில் பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார். 
    Next Story
    ×