என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கத்தில் வயதான தந்தையை சாலையில் ஓட, ஓட விரட்டி வெட்டிய மகன்
போரூர்:
வளசரவாக்கம் ஸ்ரீ தேவிகருமாரியம்மன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வைகுண்டராமன் (66) இவரது மகன் ஜெயராகவன் (29) என்ஜினீயரிங் பட்டதாரி.
ஜெயராகவன் கடந்த 2 நாட்களாக உணவு ஏதும் சாப்பிடாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஜெயராகவன் திடீரென ஆக்ரோஷமாக ரகளையில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அவர் அடித்து நொறுக்கினார்.
இதனை பார்த்த வைகுண்டராமன் மகனை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராகவன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து தந்தை வைகுண்டராமனை வெட்ட முயன்றான். வைகுண்டராமன் வீட்டை விட்டு சாலையில் வெளியே ஓடினார்.
இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த வைகுண்டராமனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






