search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கி. வீரமணி
    X
    கி. வீரமணி

    தமிழ் படித்தவர்களுக்கே பாலிடெக்னிக் விரிவுரையாளர் வாய்ப்பு: நடவடிக்கை எடுக்க அரசுக்கு கி. வீரமணி கோரிக்கை

    தமிழ் தெரிந்தோர் மட்டுமே பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு எழுதிடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
    திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையில்:-

    தமிழ் படிக்காத- தமிழ்மொழி தெரியாதவர்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணி அமர்த்துவது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குப் பாதகமானது. கற்பித்தலிலும் பிரச்சினை ஏற்படும். எனவே, வரும் 8-ம் தேதி முதல் நடக்கும் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து, தமிழ் படித்தவர்களுக்கே விரிவுரையாளர் வாய்ப்பு என்கின்ற ரீதியில் புதிய அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிடவேண்டும். 

    கொரோனா தொற்றின் காரணமாகத் தள்ளிப் போடப்பட்டு, வரும்  டிசம்பர் 8, 9,10,11 மற்றும் 12  ஆகிய நாள்களில் இந்த தேர்வுகள்
    நடக்கவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    இத்தேர்வில், தமிழ் அறியாத வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் அறியாதவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், தமிழ்நாட்டில் படித்துத் தேர்வாகியுள்ள மாணவர்களின் வேலை வாய்ப்புப் பறிபோகும் ஆபத்து உள்ளது.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  The Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,  2016 சட்டத்தின் விளைவாகத்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதன் முக்கியத்துவம் கருதி, டிசம்பர் 8 முதல் நடைபெறவுள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை நிறுத்தி, புதிய அறிவிக்கையை வெளியிட்டு, 01.12.2021 அன்று வெளியிடப்பட்ட மனிதவள மேலாண்மைத் (எம்) துறை, அரசாணை (நிலை) எண்: 133 இல் வகுக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி தேர்வு நடத்துவதே சிறந்ததாகும்.

    தமிழ்நாடு அரசு இதில் உரிய கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கி. வீரமணி கூறியுள்ளார்.
    Next Story
    ×