search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து கேரளா பதில் அளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

    கழிவு மேலாண்மையை முறையாக கையாளாதவர்கள் மீது கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
    கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதனால் அந்த பகுதிகளில்  தொற்று நோய் பரவும் அபாயமும் நீடித்து வருகிறது. 
    கேரளாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    தமிழகத்தின் பொள்ளாச்சி செமணாம்பதி அருகே, கேரள மாநில கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். பின்னர் இரட்டைமடை பிரிவு பகுதியில், அந்த கழிவுகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

    கடந்த  ஏப்ரல் மாதம்  8-ம்தேதி கேரள கழிவுகளை கொட்டிய மூன்று லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை தமிழக  விவசாயிகள் சிறைபிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த பிரச்னை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து,  வழக்குப் பதிவு செய்து விசாரித்தது

    இதனையடுத்து தேசிய பசுமைத்தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில்:-

    கேரள சோதனைச்சாவடிகளை கடந்து, அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிந்துதான், தமிழகத்தில் கழிவுகள் கொண்டு வரப்படுகிறது. தமிழக பகுதிகளில், கேரள மாநில கழிவுகள் கொட்டப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    கேரள அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில், மருத்துவம் மற்றும் திடக்கழிவுகள் மேலாண்மை எவ்வாறு செயல்படுகிற கழிவுகள் முறையாக அழிக்கப்படுகிறதா என கேரள தலைமைச்செயலர் விளக்கமளிக்க வேண்டும்.  கழிவு மேலாண்மையை முறையாக கையாளாதவர்கள் மீது கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோப்புப்படம்

    தமிழக, கேரள எல்லைப்பகுதிகளிலுள்ள சோதனைச்சாவடிகளில் பணிபுரியும் இருமாநில அதிகாரிகளும், மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×